tamilnadu

img

திமுக - சிபிஎம் தொகுதி பங்கீடு உடன்பாடு..... அதிமுக - பாஜக அணியை வீழ்த்துவோம்... கே.பாலகிருஷ்ணன்.....

சென்னை;
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக அணியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் திங்களன்று (மார்ச் 8)அண்ணா அறிவாலயத்தில்  ையெழுத்தானது. அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி,  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத் ஆகியோர் உடனிருந்தனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் அதிமுக-பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது, இடதுசாரிகள் அதிக பலத்தோடு சட்டமன்றத்தில் இடம்பெற வேண்டும். பாஜக - அதிமுகவை முறியடிப்பது எந்த அளவிற்கு அவசியமோ, அந்த அளவிற்கு, சட்டமன்றத்தில் இடதுசாரிகள் பலம் இருக்க வேண்டும் என்பதும்அவசியம். இது ஒரு நாணயத்தின் இரண்டுபக்கங்களைப் போன்றது என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.கடந்த பல தேர்தல்களில் அதிகமான இடங்களில் போட்டியிட்டுள்ள சூழலில், 6 இடங்கள் என்பது சற்று குறைவுதான். கூடுதலான இடங்களை திமுக ஒதுக்கும்என்று எதிர்பார்த்தோம். அதேசமயம் பாஜக-அதிமுக அணியை முறியடிக்க வேண்டும், பாஜகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும், தமிழகத்தில் மாற்று ஆட்சி அமைய வேண்டும் என்ற அரசியல் கடமையை நிறைவேற்ற வேண்டி உள்ளது. எனவே, அணிக்குள் சிறு இடையூறும், பிரச்சனையும் ஏற்பட்டுவிடக்கூடாது; எதிரணிக்கு ஒரு சிறு வாய்ப்பைக் கூட அளிக்கக் கூடாது என்பதால் 6 இடங்களை ஒப்புக் கொண்டோம்.கூடுதல் எண்ணிக்கை கிடைக்காத நிலையில், அரசியல் கடமையை விட்டுவிட முடியாது. அரசியல் கடமையைநிறைவேற்ற முன்னணிப் படையாக திகழவேண்டும் என்று மாநிலக்குழுவில் தீர்மானித்துள்ளோம். 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெற்றி பெற பாடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இடம் குறித்தெல்லாம் அதற்கான தேர்தல்வருகிற போது பேசலாம். ஒவ்வொரு கட்சியும் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது இயற்கை. அதிகமான இடங்கள் எதிர்பார்த்த நிலையில் அது கிடைக்கவில்லை. அதிகமான இடங்கள் கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சி அடைந்திருப்போம். போட்டியிட உள்ள தொகுதிகளின் உத்தேசப் பட்டியலை இனிதான் வழங்க உள்ளோம்” என்றார்.“பாண்டிச்சேரியில் 3 நியமன உறுப்பினர்களை வைத்துக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பாஜக கலைத்துவிட்டது. எனவே, தமிழக சட்டமன்றத் திற்கு ஒரு பாஜக உறுப்பினர் வந்தால் கூட மோசமான நிலை உருவாகும். பகுத்தறிவு, முற்போக்கு தத்துவார்த்த பின்னணி, சமூக நீதிக்கான களம் கொண்டதமிழகத்தை, மதவெறி பிடித்த ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜகவின் களமாக மாற அனுமதிக்கக் கூடாது என்பதற்காக இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளோம்” என்றும் கே.பால கிருஷ்ணன் கூறினார்.

“பாண்டிச்சேரி அனுபவத்திலிருந்து அதிகமான இடங்களில் வெற்றி பெற்று நிலையான ஆட்சி அமைக்க திமுக விரும்புகிறது. பாஜக-அதிமுகவை வீழ்த்த வேண்டும், எங்களின் பிரதிநிதிகள் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த இடங்களை ஒப்புக்கொண்டோம்” என்றும் அவர் தெளிவு படுத்தினார்.

;