tamilnadu

img

தீபாவளி: தமிழ்நாடு முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்கு, வரும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழக்கமான பேருந்துகளுடன் மொத்தமாக 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து 11,176 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து 2,910 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கென நவம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் 12,606 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவல்களுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை 24x7 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.