X“பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்கிற உறுத்தல் எங்களுக்கு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குகளை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டது என கூற முடியாது. எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எந்தக் காலத்திலும் பாஜக தமிழகத்தை ஆள முடியாது. தமிழகத்தில் மதவாதத்தை முன் வைப்பதால் பாஜக வெற்றி பெற முடியாது!” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.