சென்னை, ஆக. 31 - நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் சீமான், பொது மேடை களில் தரந்தாழ்ந்து பேசுவதை வாடிக் கையாக மாற்றியுள் ளார். அந்த வகையில், கடந்த ஜூலை 11 அன்று மறைந்த முன் னாள் முதல்வர் கரு ணாநிதியை, பட்டியல் சமூகத்திலுள்ள குறிப் பிட்ட ஒரு சாதிப் பிரிவின் பெயரைச் சொல்லி பாடல் பாடினார்.
இந்த சாதிவெறி நடவடிக்கைக்காக, சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அஜேஷ் என்பவர் கடந்த ஜூலை 22 அன்று தமிழ்நாடு ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணை யத்தில் புகார் அளித்தார். இதனை விசா ரித்த ஆணையம், சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி காவல் துறைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில், சீமான் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவு உட்பட 4 பிரிவுகளின் கீழ் பட்டா பிராம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.