tamilnadu

img

காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழைக்கு வாய்ப்பு....

சென்னை:
வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஞாயிறன்று உருவானது. இது மேலும் வலுவடைய வாய்ப்பு இல்லை என்றாலும் ஆந்திரா - ஒடிசா கடற்கரை இடையே நிலத்தை கடக்கும்.இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கடலோர உள் மாவட்டங்களில் மழை வாய்ப்பு வெகுவாக குறையும். அதே நேரத்தில் தென் மேற்கு பருவக்காற்று தீவிரமாக இருக்கும். இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட் டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் நீலகிரி, கோவை மாவட் டங்களில் இடி-மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். செவ்வாயன்று நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி மாவட் டங்களில் கனமழையும் பெய்யும். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  புதனன்று முதல் 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப் படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் செவ்வாயன்று மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 15ஆம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத் தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

;