tamilnadu

img

முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 9- வட மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வா யன்று (ஜூலை 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை  ஓட்டேரி யில் மாநில பொதுச்செயலாளர் எம்.ராம கிருஷ்ணன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அவர் பேசுகையில், மோடி  தலைமையிலான பாஜக கூட்டணி  ஆட்சி யில், சிறுபான்மையினர் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். இதனால்தான் முழுமையான அங்கீகார த்தை மக்கள் இம்முறை பாஜகவுக்கு வழங்க வில்லை என்பதைக் கூட புரிந்துகொள் ளாத பாஜகவினர் முஸ்லிம்கள் மீது தாக்கு தல் தொடுப்பது மட்டுமல்லாமல், அரசு இயந்திரத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் குடியிருப்புகளை புல்டோசர் களால் இடித்து நொறுக்கி வருகிறார்கள்.

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் வடமாநிலங்களில்  சிறு பான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பாஜக அரசின் துணையுடன் சங்பரிவாரங்கள் உள்ளிட்ட அமைப்புகள், சிறுபான்மை மக்கள் மீது நடத்தும் அராஜகத் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், மதச்சார்பின்மையை காக்க வும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலை நிறுத்தவும் ஒன்றிய அரசு வன் முறையையும் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். ஜனநாயக சக்திகள் இந்த வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர்  கேட்டுக் கொண்டார்.  

மாவட்டத் தலைவர் எம்.பி.முகம்மது நாசர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில அமைப்பாளர் எம்.சுலைமான்,  இளைஞர் அணி மாநில பொதுச்செயலா ளர் ஏ.ரஹ்மான்கான், மாநில பொருளா ளர் எஸ்.சையத் கவுல், சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கார்த்திஷ்குமார், பொருளாளர் எஸ். ஏ.வெற்றிராஜன், துணைச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் பேசினர்.

குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் மு சம்சுதீன் தலைமை வகித்தார். மாநிலத்  தலைவர் எஸ்.நூர்முகமது, மாவட்ட துணைத் தலைவர் பி. விஜய மோகனன், என்.எஸ்.கண்ணன், எஸ்.காதர் மைதீன், எம். சுஜா ஜாஸ்பின், ஒய்.முகமது அஸ்லாம் ஆகியோர் பேசினர்.