tamilnadu

img

மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு - நிவாரணம் கோரி ஜூன் 16 இல் ஆர்ப்பாட்டம்

சென்னை:
மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணத் தொகை வழங்க கோரி ஜூன் 16 இல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மின்வாரிய ஊழியர்களின் பணி இந்த ஊரடங்கு காலத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். பாராட்ட வேண்டிய தமிழக அரசும் மின்வாரிய நிர்வாகமும் கண்டு கொள்ள வில்லை.தடையில்லா மின் விநியோகத்தை பொதுமக்களுக்கு வழங்க பணியாற்றிய மின் ஊழியர்கள் மற்றும் ஒரு நிர்வாக அலுவலர் என மூவர் பாதிப்பால் இறந்துள்ளனர். இறந்தமின்வாரிய ஊழியர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் சிறப்பு காப்பீடு திட்டம் அடிப்படையில் ரூ.50 லட்சம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்புசாதனங்களை வழங்காமல் அவர்களின் உயிரோடு மின்வாரிய நிர்வாகம் விளை யாடுகிறது. களப்பிரிவு ஊழியர்களும் கணக்கீட்டுப் பிரிவு ஊழியர்களும் அச்சத்தில்பணியாற்றும் சூழல் உள்ளது என்பதைவாரிய நிர்வாகம் கவனத்தில் கொள்ள வில்லை என்பது கவலை அளிக்கிறது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பொழுதும் ஊழியர்களை பணிக்கு வரச் சொல்வது நியாயமல்ல. மின்வாரிய தலைமை அலுவல கத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த அலுவலகத்தில் தொடர்ச்சியாக நோய் தொற்றுக்கு ஆளாகிகொண்டிருக்கிறார்கள். எனவே ஊழி யர்களின் பாதுகாப்பை கருதி 33 சதவீதம் சுழற்சி முறையில் ஊழியர்களை பணிக்கு வரச் சொல்ல வேண்டும்.தொழிற்சங்கங்களின் சார்பாக பல முறை கடிதம் கொடுத்தும் வாரிய நிர்வாகத்தால் அரசிடம் கொண்டு செல்ல இயலவில்லை என்பது வெட்கக்கேடு. பட்டயம் அல்லாத இளமின் பொறியாளர் இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் நீதிமன்ற தீர்ப்பையும்வாரிய விதிமுறைகளையும் கணக்கில் கொள்ளாமல் பதவி உயர்வு வழங்க மறுத்து வருகிறது. 32 ஆண்டுகள் பணியாற்றிய களப்பிரிவு ஊழியர்களின் உச்சகட்ட பதவியான இளம் மின் பொறியாளர் முதல் நிலையை வழங்க மறுப்பது நியாயமா?

ஜே.இ., ஏஇ பதவிகளில் உள்ள பணி நிலைகளில் தன்னிச்சையாக மாற்றம் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 16 அன்று அனைத்து அலுவலகங்களி லும் கண்டன முழக்கங்களை சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டங் களை நடத்த வேண்டும்.  செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளையில் இயக்கத்தை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;