சென்னை,ஜூலை 12- சட்டப்பேரவையில் வெள்ளியன்று நடந்த விவாத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் க. சுந்தர்,“காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா, முருகன் பட்டு கூட்டுறவு சங்கங்களில் நடந்த ஊழல், முறைகேடு கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ,“தமிழ்நாடு முழுவதுமுள்ள 1,131 கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் 179 சங்கங்களை தவிற அனைத்து சங்கங்களும் லாபத்தில் இயங்கி வருகிறது. மற்ற சங்கங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். காஞ்சிபுரத்தில் முறைகேடு நடந்த தாக கூறப்படும் ஒரு சங்கத்தில் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சங்கத்தின் தலைவரும் செயலாளரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். தொடர்ந்த பேசிய சுந்தர், “நெசவாளர்க ளுக்கு கடந்த மூன்று வருடங்களாக கூலி உயர்த்தப்படவில்லை” என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர், “கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வும் அகவிலைப் படியும் வழங்கப் பட்டு வருகிறது. அந்தந்த கூட்டுறவு சங்கங் களின் நிதி நிலைமைகளுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கூலி உயர்வு வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்” என்றார்.