tamilnadu

img

மீண்டும் குறைந்தது தங்கம் விலை

சென்னை, ஜூலை 29- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்களன்று காலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து, ரூ.51,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு 4 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.3,280 வரை அதிரடியாக குறைந்தது. ஆனால் திடீரென சனிக்கிழமையன்று சவர னுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.51,720க்கு  விற்பனையானது. இந்த நிலையில் திங்களன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320-க்கும், ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ரூ.6,415-க்கும் விற்பனையானது. விலை குறைவு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.