tamilnadu

img

சாத்தனூர் அணையில் செத்து மிதந்த மீன்கள்

திருவண்ணாமலை,மே 4-திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நீர்பிடிப்பு பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாத்தனூர் அணையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குக் கூட்டுக் குடிநீர் விநியோகம் செய் யப்படுகிறது. எனவே, விநியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். பாசனத்திற்குத் தண்ணீர் திறந்ததாலும், வறட்சி காரணமாகவும் தற்போது நீர் மட்டம் 70 அடியாக உள்ளது. இந்த அணை, திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்த சாத்தனூர் அணைப் பகுதியில், மீன்வளத்துறை மூலமாக, மீனவர்கள் மூலம் மீன் உற்பத்தி செய்து விற்பளை செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மீன் பிடிக்கும் உரிமத்தைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடப் பட்டுள்ளது. தனியாருக்குக் குத்தகை விடப்பட்ட தால், தனியார் நிறுவனம், ஊழியர்களைக் கொண்டு மீன் உற்பத்தியைப் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம், ஆயிரக் கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பொதுப்பணித் துறை அலுவலருக்குத் தகவல் அளித்தனர். பொதுப்பணித்துறை அலுவலகம் சார்பில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பது குறித்து சாத்தனூர் அணை காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் தண்ணீரில் விஷம் அல்லது அமிலம் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுப்பணித்துறை அலுவலர்களும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;