திருவண்ணாமலை-வேலூர் சாலை ஊசாம்பாடி கூட்ரோடு சீலபந்தல் கிராமத்தின் மெயின்ரோட்டில் ரைஸ்மில் அருகிலுள்ள மின்கம்பம் அடிபாகத்திலிருந்து மேல்வரை முற்றிலுமாக சிமெண்டு உதிர்ந்து, வெறும் கம்பிகளால் மட்டும் தாங்கி ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. இது மக்கள் நடமாடக்கூடிய, பேருந்து நிறுத்தம் அருகாமையில் உள்ளதால் மக்கள் மரண பயத்தோடு பயணிக்கிறார்கள். இதுகுறித்து மல்லவாடி மின்சார அலுவல கத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. யாரும் கண்டுகொள்ள வில்லை. விபத்து ஏற்பட்டபிறகு நிவாரணம் மேற்கொள்வதைவிட, வரும் முன் காப்பதே நல்லது என்பதை உணர்ந்து மின்வாரிய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.