tamilnadu

img

சேதமடைந்த சாலைகள்  ரூ.1000 கோடியில் சீரமைப்பு

சென்னை, ஜூலை 8 - தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தியதாலும், இயற்கை இடர்பாடுகளாலும் சேதமடைந்த சாலைகள் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். பேரவையில் திங்களன்று (ஜூலை 8) நடைபெற்ற தமது துறை மானியத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: மாநகராட்சிகளில் உருவாகும் திடக்கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்க தேசிய அனல் மின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். கும்பகோணம் ஒன்றியத்தில் 98 கோடி ரூபாய் மதிப்பிலும், திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 71 கோடி ரூபாய் செலவிலும் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
1000 பாலங்கள்
ஊரகப்பகுதிகளில் 147 கோடி ரூபாய் செலவில் 250 சிறுபாலங்கள், 700 குறுபாலங்கள் கட்டப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்களுக்கு 144 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவரும், 118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 303 அங்கன்வாடி மையங்களும் கட்டப்படும். ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்படும். ஒன்றிய பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.