பிப்ரவரியில் சிஎஸ்ஐஆர்-நெட்
அறிவியல் துறைக்கான நெட் தேர்வு அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக்கவுன்சில்(CSIR) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு(UGC) ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.
இது குறித்த முழு விபரங்கள் https://csirnet.nta.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி 30 டிசம்பர் 2024.\
நீங்கள் ஐடிஐ படித்தவரா?
10/12/ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை; காலி பணியிடங்கள்: 1,055
பாரத் எலக்ட்ரானிக்ஸ்
பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறு வனத்தில் கீழ்வரும் பணிகளுக்கு 84 பேர் தேவை.
Engineering assistant -பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். Technician c -பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ் சல் மூலம் அனுப்பிவைக்கபடும். https://www.jobapply.in/BEL2024 என்ற இணை யத்தில் முழு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பப்படிவ லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்பி வைக்க கடைசி தேதி டிசம்பர் 17, 2024 ஆகும்.
கப்பல் கட்டும் தொழிற்சாலை
மும்பையில் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் (Mazagon Dock) ஐடிஐ மற்றும் டிப்ளமோ தகுதிக்கு 234 காலிப்பணி யிடங்கள் உள்ளன.
Non- Excecutive Posts பணி களுக்கு தகுதியான வர்கள் விண்ணப்பிக்க லாம். பல்வேறு பணிகள் டிரேடு வாரியாக அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்து தேர்வு, கப்பல் கட்டும் துறை சார்ந்த பணி அனுபவம் ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்து தேர்வு தொடர்பான விப ரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் கல்வி தகுதி பிரிவுகளை www.mazagon dock.in இணையத்தில் பார்க்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 16, 2024.
டிஆர்டிஓ-அப்ரண்டிஸ் பயிற்சி
விசாகப்பட்டினத்தில் உள்ள டிஆர்டீஓ-க்கு சொந்தமான Naval Science & Technical lab-இன் கீழ் வரும் அப்ரண்டீஸ்(தொழில் பழகு நர்) பயிற்சிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: 53 Technician Apprentice-மெக்கானிக்கல் கம்ப்யூட்டர் சயின்ஸ்/ கெமிக்கல் இன்ஜினியரிங்/புட் சயின்ஸ்/ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற ஏதாவது ஒரு பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். Trade apprentice - பிட்டர் டியூமர்/,வெல்டர்/மெஷின் லிஸ்ட்/எலக்ட்ரீசியன்/டீசல் மெக்கானிக்ஸ்/போட்டோகிராபி/மோட்டார் மெக்கானிக் போன்ற ஏதாவது ஒரு டிரேடில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Graduate apprentice -மெக்கானிக்கல்/நாவல் ஆர்க்கி டெக்சர்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/மெரைன் சயின்ஸ்/மெரைன் இன்ஜினி யரிங் போன்ற பொறியியல் பாடப் பிரிவுகள் அல்லது அதற்கு இணை யான பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி இ பி பட்டம் பெற்றி ருக்க வேண்டும். 60% மதிப்பெண் களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
B.E/Diploma/ITI போன்ற சம்பந்தப்பட்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதி யானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய் யப்படுபவர்.2022-ம் ஆண்டிற்குப் பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
மேலும் விபரங்களுக்கு www. apprenticeshipindia.org மற்றும் nats.education.gov.in என்ற இணையதளம் வழியாகவும் தங்களு டைய கல்வித் தகுதி தொடர்பான விப ரங்களை பதிவு செய்து விட்டு டிஆர்டிஓ இணையதளத்தில் கொடுக் கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும். விண் ணப்ப நகல்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15 டிசம்பர் 2024.