சென்னை,டிச.21- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளில் ஒன்று மதச்சார்பின்மை. இப்போது மத்திய பாஜக அரசால் நிறைவேற்ற ப்பட்டுள்ள குடியுரிமை ‘திருத்தச் சட்டம் 2019’ பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான்,பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் நாடு களில் மதரீதியாக துன்புறுத்த லுக்குள்ளாகும். சிறுபான்மை யினரில் முஸ்லிம்களைத் தவிரப் பிறருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்கிறது. இப்படி சட்டத்தினுள் மத அடிப்படையை ஒரு அளவுகோலா கப் புகுத்தும்போது அரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசே செயல்படுத்துவதா கும். மேலும், நமது குடியரசை வழி நடத்தும் கொள்கைகளான சுதந்தி ரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றுக்கும் எதிரானதாகும். குடிமக்கமள வகைப்படுத்தலாம். ஆனால், அப்படி வகைப்படுத்துவது மதம், பாலினம், பிறப்பிடம் ஆகிய வற்றின் அடிப்படையில் இருக்கக் கூடாது என்கிறது நமது அரசியல மைச் சட்டம். ஆனால், மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்தையும், பிறப்பிடத்தையும் கொண்டு புலம்பெயர்ந்தோரை வகைப்படுத்து கிறது. இது பெரும் ஆபத்தாகும். மத்தியில் இருக்கும் மதவெறிக்கூட்டத்தின் இத்தகைய நயவஞ்சகத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது. மாணவர்க ளும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசு பாஜகவின் அடிமையாகிவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கண்டன் குரலை எழுப்பி வருகிறது. முதல்கட்டமாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் டிசம்பர் 23 ஆம் தேதி திங்களன்று தலைநகர் சென்னையில் மிகபிரமாண்ட பேரணியை நடத்துவது என்று தீர்மானித்திருக்கிறது. இந்த போராட்டத்தில் மக்கள் நீதி மய்யமும் கலந்துகொள்கிறது. இந்த பேரணியில் பெரும் திரளாகத் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய ஜனநாயக கட்சி(ஐஜேகே), உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலை வர்களும் அழைப்பு விடுத்திருக்கி றார்கள். எழும்பூரிலிருந்து காலை 10 மணிக்கு துவங்கும் இந்த பேரணி யின் முக்கியத்தும் குறித்தும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டியதன் அவசியம் பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் ஞாயிறன்று(டிச.22) எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நேரு பூங்கா அடுக்குமாடிக் குடி யிருப்பு பகுதியிலிருந்து காலை 9 மணிக்குப் பிரச்சாரம் துவங்கு கிறது. இந்த பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராஜன் துவக்கி வைக்கிறார். ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி புஷ்பா நகரில்முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவியும், அண்ணா நகர் தொகுதியில் எம்எம்டிஏ பேருந்து நிலையம் அருகில் திரைப்பட இயக்குநர் லெனின் பாரதியும், துறைமுகம் தொகுதி ஏழு கிணுறு பகுதியில் பேராசிரியர் ஹாஜாகனியும், வில்லிவாக்கம் தொகுதி அயனா வரம் மார்க்கெட்டில் முன்னாள் எம்எல்ஏ க. பீம்ராவ், சேப்பாக்கம்- திருவல்லக்கேணி பகுதிக்குழுக்கள் சார்பில் மெரினா மாட்டாங்குப்பத்தில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரும் கலந்து கொண்டு துவக்கி வைத்து உரையாற்று கிறார்கள். இந்த தகவலை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா தெரிவித்துள்ளார்.