tamilnadu

img

சிபிஎம் மூத்த தோழர் வி.கே.ராமசாமி காலமானார்

சென்னை,ஜூன் 12- மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வடசென்னை மாவட்ட மூத்த உறுப்பினர் வி.கே.ராமசாமி வயது மூப்பு காரணமாக புதனன்று (ஜீன்12) காலமானார் அவருக்கு வயது 93. தோழர் ஜீவாவுடன் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்ட அவர் பின்னர் மேற்குவங்கம் சென்று ரயில்வே தொழிலாளி யாக பணிபுரிந்தபோது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார்.பணி ஓய்வு பெற்று 30 ஆண்டுகளுக்கு முன்பு  விநாயகபுரத்தில் குடி யேறிய அவர், கட்சி உறுப்பி னர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். அப்பகுதியில் கட்சியை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டார். அவருக்கு சுந்தரம்மாள் என்ற மனைவியும் 4 மகள்கள், 3 மகன்கள் உள்ள னர். விநாயகபுரம் சரஸ்வ திநகரில் வைக்கப்பட்டிருந்த தோழர் ராமசாமி உடலுக்கு மாவட்டக்குழு உறுப்பினர் செ.சுந்தரராஜ், போக்கு வரத்து தொழிற்சங்க த்தலைவர் ஏ.பி.அன்பழகன், பகுதிச்செயலாளர் கமலநாதன், வி.ஆனந்தன், சரவணன், தாமோதரன், தமிழ்செல்வி  உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மாலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

;