ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள ஜனநாயக, மக்கள் விரோத புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி இன்று சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.