tamilnadu

நீதிமன்ற வழக்கு-மேல்முறையீட்டு கட்டணம் குறைப்பு: மசோதா தாக்கல்..

சென்னை:
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்கு மற்றும் மேல்முறையீடு மனுதாக்கல் செய்ய தற்போது செலுத்தப்படும் கட்டணத்தை குறைப்பதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார்.
  அதில் கூறியிருப்பதாவது:-

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சம்பத் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டிiல் தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப் பீட்டுச் திருத்தம் சட்டத்தின் படி தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் நீதிப்பேராணை மனு (ரிட் மனு) தாக்கல் செய்யும்போது கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல் மேல்முறையீட்டிற்காக தாக்கல் செய் யப்படும் மேல்முறையீட்டு நீதிப்பேராணைக்கான (ரிட் அப்பீல்) கட்டணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட வேண்டும்.இந்த கட்டணங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய் யப்பட்டது. அதில், இந்த கட்டண உயர்வை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற கருத்தை அரசு பரிசீலித்து, நீதிப்பேராணை மனு தாக்கல் செய்வதற்கான நீதிமன்றக் கட்டணத்தை ரூ.750- என்றும், மேல்முறையீட்டு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்வதற்கான கட்டணத்தை ரூ.1,500 என்றும் குறைக்கும் வகையில் இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;