tamilnadu

img

மாநகராட்சி-நகராட்சிக்கு தேர்தல் வருவது சந்தேகம்: மு.க. ஸ்டாலின்

சென்னை:
உள்ளாட்சியில் தி.மு.க.வுக்கு அதிக இடம் கிடைத்ததால் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு தேர்தல் வருவது சந்தேகம்தான் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மக்களுடைய எண்ணம் எப்படி இருந்தாலும், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல், இவற்றையெல்லாம் தாண் டித்தான் உள்ளாட்சித் தேர் தலை சந்தித்தோம்” என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சனையில் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது சி.சி.டி.வி. வைக்க வேண்டும் என கோரினோம். சி.சி.டி.வி. மட்டும் இல்லாமல் இருந் திருந்தால், உள்ளாட்சித் தேர் தலில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்க முடியுமா? முடியவே முடியாது. நீதிமன்றத்திற்கு நாம் போனதால்தான் இந்த உத்தரவு கிடைத்தது என்றும் அவர் கூறினார்.ஊரகப் பகுதிகளில் மட்டும்தான் தேர்தல் நடைபெற்றது. இன்னும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கவில்லை. நடந்திருந்தால் நிச்சயமாக சென்னையில் நம்முடைய மேயர்தான் தற்போது கொடி கட்டி உட்கார்த்திருக்கக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும். வந்திருக்கும் தேர் தல் முடிவுகளை பார்த்தால் தேர்தலை நடத்துவார்களா? என்பது கேள்விக்குறிதான் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

;