tamilnadu

கொரோனா வைரஸ் எதிரொலி: குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தக்கோரிக்கை

சென்னை, மார்ச் 19- மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை தொழிலாளர் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் செங்கொடி சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின்  தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன், பொதுச்செயலாளர் பி. சினிவாசலு ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: பெருநகர சென்னை மாந கராட்சி துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கும் திட்டத்தை மிக சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலை யில் மனித குலத்தையே மிரட்டி வரும் கொடிய நோயான “கொரோனா” வைரஸூக்கு எதிராக உல கமே போராடி வருகிறது. இந்த வேளையில் நமது துப்புரவு தொழிலாளர்கள் பொதுமக்களால் அன்றா டம் பயன்படுத்தி வீசப்படும்  பலவகையான குப்பைகளை  தினம்தோறும் 5,000 டன்  னுக்கு மேற்பட்ட குப்பை களை தரம் பிரித்து அகற்றும்  பணியில் ஈடுபட்டு வருகி றார்கள். இதனால் துப்புரவு தொழிலாளர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என சில  மருத்துவர்கள் கருத்து தெரி வித்து வருகின்றனர். எனவே குப்பையை தரம்  பிரிக்கும் பணியை தற்காலிக மாக நிறுத்தி அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளை அகற்றி அப்படியே குப்பைக்  கொட்டும் வளாகத்திற்கு அனுப்பி வைத்தால் நம்  துப்புரவு தொழிலாளர்க ளுக்கு பாதுகாப்பாக இருக்  கும். இதனை நடைமுறைப் படுத்தி நமது துப்புரவு தொழி லாளர்களை பாதுகாத்திடு மாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;