சென்னை
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது(கொரோனா பாதிப்பு பற்றிய சுருக்கம்),"தமிழகத்தில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,267ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 180 பேர் குணம் அடைந்துள்ளனர்" எனக் கூறியுள்ளார்