சென்னை, அக். 2 - ‘சாம்சங்’ தொழிலாளர்களுக்கு ஆதர வாகவும், காவல்துறையின் அடக்குமுறை களைக் கண்டித்தும், இடதுசாரிக் கட்சிகள் அக்டோபர் 5 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
5 முறை நடந்த பேச்சுவார்த்தை
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்தி ரத்தில் உள்ள ‘சாம்சங் இந்தியா’ எலெக்ட் ரானிக் நிறுவனத் தொழிலாளர்கள் 4-ஆவது வாரமாக, வேலை நிறுத்தம் செய்து வரு கின்றனர். 1500 தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த வேலைநிறுத்தம் முடிவு காண வேண்டுமெனில் தமிழ்நாடு அரசு மேலும் கூடுதல் தலையீடு செய்து, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. தொழிலாளர் துறை அமைச்சர், துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு 5 முறை பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால், உடன்பாடு எதுவும் காணப்பட வில்லை.
தொழிலாளர் துறை அலட்சியம்!
தொழிலாளர்களின் கோரிக்கைகளான, ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க’த்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்; தொழிற்சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி நிறுவனம் சுமூகத் தீர்வு காண வேண்டும். இவை இரண்டும் அடிப்படை உரிமைகள் சம்மந்தப்பட்டதாகும். அடிப்படை உரிமைகளுக்காக, வேலை நிறுத்தம் நீடிப்பது, கார்ப்பரேட் பெரு நிறு வனங்களின் தொழிலாளர் விரோத அணுகு முறை தொடர்வதையே காட்டுகிறது.
காவல்துறை அடக்குமுறை!
அமைதியான முறையில் போராடி வரும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அச்சுறுத்தும் வகை யில், மாவட்டக் காவல்துறை நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னையில் அனைத்துத் தொழிற்சங்கத்தி னரின் கூட்டுப் போராட்டத்திற்கும் காவல் துறை அனுமதி மறுத்ததுடன் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட வந்த அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களையும் கைது செய்துள்ளதானது ‘சாம்சங்’ நிறுவனத்தின் அடக்குமுறைக் கருவியாக காவல்துறை மாறியுள்ளதைக் காட்டுகிறது.
வழக்கம் போல் தொழிலாளர் துறை, தொழிற்சங்கத்தை பதிவு செய்ய மறுப்பதும், காவல்துறை தலையீடுகளும் அரசின் கொள்கையை மீறி செயல்படுகின்றனவா, என்ற கேள்விகளை எழுப்புகின்றன.
முதல்வர் தலையிட வேண்டும்!
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர் துறை இதுவரை கடைபிடித்த தொழிற்சங்கப் பதிவு நட வடிக்கையை போல், விண்ணப்பித்து 100 நாட்களுக்கும் மேலாகிவிட்ட ‘சாம்சங் தொழி லாளர் சங்கத்’தை தாமதமின்றி பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் வழங்கிடு மாறும், தொழிலாளர் கோரிக்கைகள் குறித்து தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சங்கத்து டன் பேச்சுவார்த்தையை தொழிலாளர் துறையில் நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் தலை யீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் –லெனினிஸ்ட் ) லிபரேசன் சார்பில் 5.10.2024 அன்று சென்னையில் ஆர்ப் பாட்டம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நியாயமான கோரிக்கைகளுக்காக நடை பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும், தொழிலாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு பேராதரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.