tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு துவங்கியது.... முதல்வர் மு.க.ஸ்டாலின், சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா - அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்து....

8 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியில் சிறைக் கொட்டடியில் கழித்த, 3ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பேரெழுச்சிமிக்க விடுதலைப் போராட்ட வீரர்,  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர், இந்திய அரசியல் வானில் வாழும் வரலாறாகத் திகழும் தோழர் என்.சங்கரய்யா தனது நூறாவது அகவையை ஜூலை 15 வியாழனன்று எட்டினார். தமிழக மக்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் பெரும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் சங்கரய்யா நூற்றாண்டு அளித்திருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது, சங்கரய்யா நூற்றாண்டு துவக்க நிகழ்வுகள்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு வியாழனன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா உள்பட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று தோழர் சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, அவரிடம் வாழ்த்துப் பெற்றுக் கொண்டனர். 

தமிழகம் முழுவதும் சங்கரய்யா நூற்றாண்டையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் அணிகள் பெரும் உற்சாகத்துடன் ஏராளமான நிகழ்வுகளை நடத்தினர். தீக்கதிர் நாளிதழ், சங்கரய்யா நூற்றாண்டு சிறப்பிதழ் வெளியிட்டது. 250 பக்கங்களுக்கும் மேலாக சுமார் 2 லட்சம் பிரதிகளை தீக்கதிர் பதிப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

;