சென்னை, ஜூன் 13 - சென்னை மாநகராட்சி அலுவலர் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் வியாழனன்று (ஜூன் 13) போரூரில் மருந்தகம் திறக்கப்பட்டு ள்ளது. அலுவலர் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் ஏற்கெனவே ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆவின் பாலகம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக 74/112, மவுண்ட்-பூந்தமல்லி சாலை, போரூர், சென்i-115 (பழைய எஸ்ஆர்எம்சி காவல்நிலை யம்) என்ற முகவரியில் புதிய மருந்தகம் திறக்கப்பட்டு ள்ளது. இந்த மருந்தகத்தை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசூதனரெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மண்டல அலுவலர் சசிகலா, கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ், துணைத்தலைவர ராஜாமணி மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இந்த மருந்தகத்தில் மருந்துகளுக்கு 20 விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது. தொலை பேசியில் பதிவு செய்தால், வீட்டிற்கே விநியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவு சங்கத் தலைவர் தேவராஜன் கூறினார். தொடர்புக்கு 24769191