tamilnadu

திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் அழைப்பு!

சென்னை, ஜூலை 12- சட்டப்பேரவையில் கைத்தறி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் க. சுந்தர், “செங்கல்  பட்டை அடுத்த  பரனூர் சுங்கச் சாவடி பல  ஆண்டு காலமாக வசூல் செய்து வருவதால்  மூட வேண்டும், கிடப்பில் கிடக்கும் வாலாஜா பாத்-உத்திரமேரூர் புறவழிச்சாலை பணியை  விரைந்து முடிக்க வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட முதல்வர், “சுங்கச்  சாவடிகளை மூட வேண்டும் என்பதில் எங்க ளுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.  இதை கொண்டு வந்தது திமுக அங்கம் வகித்த  மத்திய அரசுதான். திமுக அமைச்சர்தான். இப்போது திமுக எம்பிக்கள் அதிகமாக உள்ள தால் சுங்கச்சாவடிகளை அகற்ற மக்களவை யில் குரல் கொடுத்து உதவிட வேண்டும்” என்றார். வாலாஜாபாத், உத்திரமேரூர் புறவழிச் சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கைய கப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின் றது. அந்த பணிகள் முடிந்ததும் சாலை அமைக்கும் பணி துவங்கப்படும் என்றும் முத லமைச்சர் கூறினார்.