tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வைக்காத்த சிஐடியு

திருவண்ணாமலை, ஜன. 24- திருவண்ணாமலை மாவட்டத்தில் சிஐடியு  டாஸ்மாக்  ஊழியர் சங்கம் கடந்த 2006 ஆம்  ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய விற்ப னையாளர்களுக்கு சம்பளமாக ஆயிரம் ரூபா யும், மேற்பார்வையாளர்களுக்கு 2000 ரூபா யும் சம்பளமாக வழங்கப்பட்டது.  ஊழியர்க ளின் பணிப்பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி,  டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில்  திரு வண்ணாமலை மாவட்டத்தில் 24 மணி நேர உண்ணாவிரதம் மற்றும் 48 மணிநேர உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது. கடையடைப்பு போராட்டத் தில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்ட  தோழர்கள்,  வேலூர் மத்திய சிறையில் 11  நாட்கள் அடைக்கப்பட்டனர். சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக  தற்போது,  விற்பனையாளர்களுக்கு 10,500 ரூபாயும், மேற்பார்வையாளர்களுக்கு 13 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.  இன்றும்,  டாஸ்மாக் நிறுவனத்தில் பணி யாற்றும் ஊழியர்களின் பணி பாதுகாப்பு, சம்பள உயர்வு, பணியிட மாற்றம் பழி வாங்கும் நடவடிக்கை உள்ளிட்ட, ஊழியர் விரோத போக்குகளுக்கு எதிராக, சிஐடியு சங்கம் களத்தில் நின்று போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;