tamilnadu

img

‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனை’

சென்னை, ஜூன் 21- சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பிறகு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் மீது  விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களு க்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது

“அரசுக்குப் பல ஆக்கப்பூர்வமான கருத்துக் களை தெரிவித்தவர்களுக்கு என்னுடைய நன்றி. அரசு நிச்சயமாக அதை கவனத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் வெளி நடப்பு செய்யாமல், அவைக்குள் இருந்து தன் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கலாம். ஆனால், ஏனோ அதனைச் செய்யாமல் இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்சனையிலும் அரசியல் காரணங்களுக்காகத் தன் கட்சியினருடன் வெளியே சென்றுவிட்டார்.

“அரசுக்குப் பல ஆக்கப்பூர்வமான கருத்துக் களை தெரிவித்தவர்களுக்கு என்னுடைய நன்றி. அரசு நிச்சயமாக அதை கவனத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் வெளி நடப்பு செய்யாமல், அவைக்குள் இருந்து தன் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கலாம். ஆனால், ஏனோ அதனைச் செய்யாமல் இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்சனையிலும் அரசியல் காரணங்களுக்காகத் தன் கட்சியினருடன் வெளியே சென்றுவிட்டார்.

மருத்துவப் பணிகளை விரைவுபடுத்திட கூடுதலாக 57 அரசு மருத்துவர்கள், விழுப்புரம், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவப் பணிகளை விரைவுபடுத்திட கூடுதலாக 57 அரசு மருத்துவர்கள், விழுப்புரம், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற நிகழ்வுகளில் சிகிச்சைக்குப் பயன்படுத்தக் கூடிய உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் போதுமான அளவில் இருப்பில் வைக்கப் பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில், பாதிக்கப் பட்டவர்களின் உயிர்களைக் காத்திடும் பொருட்டு, அவை வெளிச்சந்தையில் வாங்கி யும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவப் பணிகளை ஒருங்கிணைத்திட தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் அவர்களும், மருத்துவக் கல்வி இயக்குநரும் முன்பே அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

3 பேர் கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக, கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி என்பவர் காவல்துறை யினரால் உடனடியாக கைது செய்யப்பட்டி ருக்கிறார். அவரிடமிருந்து 200 லிட்டர் மெத்த னால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தாமோதரன், மதன், விஜயா ஆகிய 3 நபர்களும் கைது செய்ய ப்பட்டிருக்கின்றனர். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 20-ஆம் தேதி காலையில் ஆய்வுக் கூட்டத்தை உயர் அதிகாரிகளோடு நடத்தினேன். அதனையடுத்து, அமைச் சர்கள் எ.வ. வேலு, உதயநிதி, மா. சுப்பிரமணி யன் ஆகிய மூவரையும் மீண்டும் கள்ளக்குறிச்சி க்கு அனுப்பி வைத்தேன். அவர்களும் கள்ளக் குறிச்சிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அரசு அறிவித்த தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கினார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை

நம் அனைவருக்கும் வார்த்தைகளால் விவ ரிக்க முடியாத அளவிற்கு வேதனையை அளித்து ள்ள இந்தத் துயர சம்பவத்திற்குப் பொறுப்பா னவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர், மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர், திருக்கோவிலூர் சட்டம் - ஒழுங்குக் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றப்பட்டு, காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள னர். இந்தச் சம்பவம் குறித்து தீர விசாரிக்கவும், அதனடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வும் இந்த வழக்கினை உடனடியாக சிபி சிஐடி வசம் ஒப்படைக்கவும் உத்தர விட்டேன்.

கடந்த ஆண்டு மே மாதம் நடை பெற்ற இதேபோன்ற சம்பவம் தொடர் பான வழக்கினை இந்த அரசு சிபி சிஐடியிடம் ஒப்படைத்தது. அந்த வழக்கு இரண்டு மாவட்டங்கள் தொடர்புடையது. அதில், விழுப்புரம் வழக்கினைப் பொறுத்தவரையில், 21 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டனர். 8 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

காவல் துறை அலுவலர்கள் 16  பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. 6 காவல் துறை  அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்கள். இந்த வழக்கின் விசார ணை இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ளது.

4 லட்சத்து 63 ஆயிரம் வழக்குகள்

தமிழ்நாடு அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், போலி மதுபானங்கள் கடத்து வது மற்றும் விற்பனை செய்வது போன்ற குற்றச் செயல்கள் நடைபெறா வண்ணம் தீவிர தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது. இது வரை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது 4 லட்சத்து 63 ஆயிரத்து 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

565 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள னர். 16 லட்சத்து 51 ஆயிரத்து 633 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 42 ஆயிரத்து 19 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 28 லட்சத்து 79 ஆயிரத்து 605 லிட்டர்  ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப் பட்டுள்ளது. 14 ஆயிரத்து 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10  ஆயிரத்து 154 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேர் குண்டர்  தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார். 

மேலும், “கள்ளக்குறிச்சி சம்ப வத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்’ என்று ஒரு சிலர் பேசினர். உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் எந்தப் பிரச்சனையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளையும் பட்டி யலிட்டிருக்கிறேன். குற்றவாளிகளைக் கைது செய்து விட்டுத்தான் உங்களுக்கு பதில் அளித்திருக்கிறேன். திறந்த மனத்தோடு இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்” என்றும் கூறினார்.
 



 

;