tamilnadu

img

புதுவை பெரிய அங்காடியில் முதல்வர் திடீர் ஆய்வு

புதுச்சேரி, ஜூன் 11- புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பெரிய அங்காடி சிறு  வியாபாரிகளுக்கான மொத்த வியாபார ஸ்தல மாக உள்ளது. இங்கு மளிகை, காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் மொத்த விலையில் கிடைக்கிறது. இத னால் இங்கு வியாபாரிகள்  மட்டுமின்றி, பொதுமக்க ளும் ஏராளமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் புதுவை யில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே பெரிய அங்காடியை ரோடி யர் மில் திடல் உள்ளிட்ட ஏதே னும் ஒரு பகுதிக்கு மாற்ற லாமா என்றும் அரசு ஆராய்ந்து வருகின்றது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி வியாழ னன்று (ஜூன் 11) குபேர்  பெரிய அங்காடி பகுதிக்குச்  சென்று ஆய்வு மேற்கொண் டார். அப்போது முகக் கவ சம் மற்றும் தனிமனித இடை வெளியை கடைபிடிக்கப் படவில்லை எனில் அங்காடி கள் இடமாற்றம் செய்யப்ப டும் என வியாபாரிகளை எச்சரித்தார்.