உலக புத்தக தினத்தையொட்டி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிகவரி அலுவலகத்தில் இரண்டு நாள் புத்தகக்காட்சி திங்களன்று (ஏப்.29) தொடங்கியது. தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கம், பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த விற்பனை காட்சியை சங்கத்தின் முன்னாள் தலைவர் வி.தேவன் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் டானியல் ஜெயசிங், செயலாளர் ரவிராஜ், நிர்வாகிகள் குணகேரன், பாலகிருஷ்ணன், கலைச்செல்வி, மாரிச்சாமி, சுமதி, இர்பான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.