tamilnadu

img

கோவிட்-19 : சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,131 ஆக உயர்வு

சென்னையில், கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,131 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 17,082 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 118 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்  765 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்,   549 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் இதுவரை 11,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 83 பேர் உயிரிழந்துள்ளனர்; 5331 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னையில், அதிகபட்சமாக  ராயபுரத்தில் 2,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 21 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 1,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 11 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 1,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 1,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 9 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க.நகரில்  1,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15 பேர் உயிரிழந்துள்ளனர்.