tamilnadu

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 85.80 சதவீதம் தேர்ச்சி

சென்னை, ஜூலை 16- 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 85.80 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதில்  2020ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத்  தேர்வில் ஆயிரத்து 675 மாணவர்கள், 2 ஆயிரத்து 973 மாண வியர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 648 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் ஆயிரத்து 306 மாணவர்கள், 2 ஆயிரத்து 682 மாணவியர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 988 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.80 ஆகும்.  கணினி அறிவியல் பாடத்தில் 6 மாணவர்கள் 100க்கு 100  மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், 6 மாணவர்கள் 550க்கும்  அதிகமாகவும், 53 மாணவர்கள் 500க்கும் அதிகமாகவும், 219  மாணவர்கள் 450க்கும் அதிகமாகவும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேற்கு மாம்பலம், சென்னை மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் பெற்றுள்ளது.