tamilnadu

img

தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு....

சென்னை:
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, ரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.மே 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட் டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

மே 31 மற்றும் ஜூன் 1ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட் டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 3ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், சுரைக்காற்றுடன் (30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழையும், பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். 

தமிழகத்தில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப் புரம் மற்றும் திருவண்ணாமலை  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;