tamilnadu

img

மத்திய, மாநில அரசுகளிடம் மக்கள் விரோத போக்கை கண்டித்து வடசென்னையில் சிஐடியு பிரச்சார இயக்கம்

சென்னை, நவ. 19- மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் செவ்வாயன்று (நவ. 19) நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக வடசென்னை மாவட்டக்குழு சார்பில் ஆவடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு ஆவடி பணிமனை பொருளாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். பிரச்சாரத்தை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் துவக்கி வைத்தார். அரசு போக்குவரத்துக் கழக சம்மேளன மாநிலப் பொருளாளர் சசிகுமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.ஜெயராமன், ஏ.ஜி.காசிநாதன், சு.லெனின்சுந்தர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணை ப்புக் குழு கண்வீனர் இரா.மணி மேகலை, மாவட்ட நிர்வாகிகள் ஜீவானந்தம், ம.பூபாலன், ஆர்.ராஜன், சடையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் சி.திரு வேட்டை  பேசியதாவது:- கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி அமைக்கி றது. மத்திய மாநில அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிப்போம் எனக் கூறியது. ஆனால் காலிப் பணியிடங்களை நிரப்ப  மத்திய அரசு மறுக்கிறது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்வசம் ஒப்படைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்புத் துறை தனியார்மய மானால் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பாதுகாப்பு தளவாடங்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்யக் கூடும். அப்படி யென்றால் நாட்டின் பாதுகாப்பு என்ன வாகும். அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும் நிரந்தரப் பணி என்பது ஒழித்துக் கட்டப்படுவதால் உதிரி தொழிலாளர்கள், முறைசாரா தொழி லாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.  நவீன அறிவியலை உற்பத்தி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தொழி லாளர்களின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டுமே தவிர, ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு பயன்படு த்தக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். அம்பத்தூர் பகுதிக்கு வந்த பிரச்சாரக்குழுவிற்கு மோட்டார் வாகன சங்க பகுதித் தலைவர் ஏ.ராயப்பன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  சிஐடியு மாநிலச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், சு.பால்சாமி, பி.என்.உண்ணி, சி.சுந்தர்ரா ஜன், செங்கொடி சங்க மண்டலச் செய லாளர் ஆர்.குப்புசாமி, பொன்னுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.  ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஐசிஎப் பேருந்து நிலையத்தில் தலைவர் எஸ்.ராமலிங்கம் தலைமையில் வரவேற்பளி க்கப்பட்டது. செயல் தலைவர் வி.எம்.கிருஷ்ணகுமார், பொதுச் செயலாளர் ப.ராஜாராம், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஓட்டேரி பகுதியில் கிருஷ்ணன் தலைமையில் வரவேற்பளி க்கப்பட்டது. இதில் மாவட்டத் தலை வர் ஏ.எல்.மனோகரன், செயலாளர் ஜெயபால், சுரேஷ், என்.சி.தாமஸ், செல்வராஜ் (அப்பள சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் துறைமுகத்தில் அருள்குமார் தலைமையிலும், ராயபுரத்தில் வெங்கட் தலைமையிலும், தண்டையார்பேட்டையில் மாநகர போக்குவரத்து சிஐடியு தொழிற் சங்க பொருளாளர் பாலாஜி தலைமையிலும் வரவேற்பளிக்கப்பட்டது.

;