tamilnadu

img

கேப்டன் லட்சுமி ஷெகல் நினைவு தினத்தையொட்டி கண் மற்றும் உடல் உறுப்புதானம் நிகழ்ச்சி

விடுதலைப் போராட்ட வீரர் கேப்டன் லட்சுமி ஷெகல் நினைவு தினத்தையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண் மற்றும் உடல் உறுப்புதானம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்சென்னை மாவட்டம் சார்பில் சனிக்கிழமையன்று (ஆக.10) கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை மருத்துவர் ஜெயராணி காமராஜ் தொடங்கி வைத்தார். அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலாளர் வி.தனலட்சுமி, பொருளாளர் ம.சித்ரகலா, எம்.விஜயா, தமுஎகச மாநில துணைத்தலைவர் சுந்தரவள்ளி உள்ளிட்டோர் பேசினர்.