tamilnadu

img

குழந்தைகளுக்கான ரத்தப்புற்று, எலும்பு மஜ்ஜை சிகிச்சை மையம்

சென்னை, ஏப்.9 குழந்தைகள் மற்றும் இளம் சிறார்களுக்கு ஏற்படும்எல்லாவிதமான புற்றுநோய்க்கும் சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவமனையை வி.எஸ். மருத்துவமனை குழுமம் சென்னைஎழும்பூரில் தொடங்கியுள்ளது. குழந்தைகளுக்கான லண்டன் ரத்தப் புற்று சிகிச்சை சங்கத்துடன் இணைந்து இந்த மையம் செயல்படும். இந்த மையத்தை புற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதில் இருந்துமீண்டுள்ள திரைக்கலைஞர் கவுதமி திறந்துவைத்தார். தமிழக அரசின் நிதித்துறை செயலர் சண்முகம், மாநகராட்சி முன்னாள் ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.நாட்டில் ஐந்து முதல் பதினான்கு வயதுடைய இளஞ்சிறார்கள் உயிரிழப்பதற்கு ஒன்பதாவது முக்கிய காரணியாக புற்றுநோய் விளங்குகிறது. ஆண்டு தோறும் 45000குழந்தைகள் புதிதாக இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். உலகெங்கிலும் உள்ளது போல் இந்தியாவிலும் ரத்தப்புற்று நோயும்நிணநீர்ச்சுரப்பி புற்றுநோயுமே அதிகமாக ஏற்படுகிறது. 2024ஆம்ஆண்டு நம் மக்கள் தொகையில் சீனாவைபின்னுக்கு தள்ளும்போது, அதில் பெரும்பான்மையாக விளங்கும் குழந்தைகளை பாதுகாக்க துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம் என்று நிகழ்ச்சியில் பேசிய வி.எஸ். மருத்துவமனை குழுமத்தின் நிறுவனத் தலைவரும் மேலாண் இயக்குனருமான மூத்த புற்று நோயியல் நிபுணருமான பேராசிரியர் சுப்ரமணியன் கூறினார்.

;