கொரோனா வைரஸ் மற்றும் பறவைக் காய்ச்சல் குறித்து மக்களிடம் தவறான கருத்து பரவியதால் சென்னையில் சிக்கன் பிரியாணி விற்பனை பெருமளவு குறைந்தது. இதனை மீண்டும் அதிகரிக்க சென்னை யில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ஓட்டல் களில் சாதாரண சாப்பாட்டைவிட பிரியா ணிக்கு தனி மவுசு உள்ளது. மட்டன் பிரியாணி யைவிட சிக்கன் பிரியாணியை அதிகமா னோர் விரும்பி சாப்பிட்டனர். இதனால் சிக்கன் பிரியாணி விற்பனை சூடுபிடித்தது. சிறிய ஓட்டல்களிலும், தள்ளுவண்டிகளிலும் சிக்கன் பிரியாணி அமோகமாக விற்பனை யாகி வந்தது. இந்த நிலையில் பிராய்லர் கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியா னது. இதனால், கோழி இறைச்சி விற்பனை பாதிப்பு அடைந்தது. தற்போது கோழிகள் மூலம் பறவைக்காய்ச்சல் பரவுவதாக வதந்தி பரவியது. இதனால் கோழி இறைச்சி மட்டு மல்ல, சிக்கன் பிரியாணி விற்பனையும் கடு மையான சரிவை சந்தித்துள்ளது. பெரிய ஓட்டல்கள் முதல் தள்ளுவண்டியில் பிரி யாணி விற்பவர்கள் வரை ஏராளமானோர் வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள். சிக்கன் பிரியாணி விற்பனையை மீண்டும் அதிகரிக்க சென்னையில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள்கள் புதிய அறி விப்பை வெளியிட்டுள்ளன. அதில், ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு பிளேட் ‘சிக்கன் 65’ இலவசம் என்று கவர்ச்சி யான சலுகையை வழங்கி உள்ளனர். ஒரு சிலர் வேறு விதமான தள்ளுபடிகளை அறி வித்துள்ளனர். இதுகுறித்து, ஓட்டல் பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது:- கோழி இறைச்சி பற்றி தவறான தகவல் பரவியதால் அதன் விற்பனை 30 சதவீதமாக குறைந்துவிட்டது. சிக்கன் பிரியாணி விற்ப னையும் பெருமளவு குறைந்துள்ளது. தற்போது கோழி இறைச்சி விலை மிக வும் குறைந்துவிட்டது. எனவே, ‘சிக்கன் 65’ இலவசம் என்று அறிவித்துள்ளோம். முட்டைகளின் தேவையும் குறைந்துவிட்டது. எனவே கோழிக்கறி, முட்டை கொள்முதலை குறைத்துவிட்டோம். சரிந்த விற்பனையை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். சாலையோரம் பிரியாணி கடை வைத்தி ருக்கும் ஒருவர் கூறுகையில்முன்பு தினமும் 10 கிலோ கோழிகறி வாங்கி பிரியாணி தயா ரிப்போம். தற்போது அது 3 கிலோவாகி விட்டது. தினமும் 500 முட்டைகள் வாங்கி யது 50 ஆக குறைந்து விட்டது. பிரியாணி வியாபாரம் இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.