tamilnadu

img

ஆட்டோ பறிமுதல்: மாற்று திறனாளி ஓட்டுனர் தற்கொலை முயற்சி

சென்னை, ஜூலை 2 - தாம்பரம் அடுத்த ஒரகடத்தை சேர்ந்த மாற்று  திறனாளி ஆட்டோ ஓட்டுனர் அரிகிருஷ்ணன் (வயது 35). இவர் தனது நண்பர் ஒருவரை தாம்ப ரத்தில் இறக்கிவிட ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது, மேற்கு தாம்பரம் முடிச்சூர்  சாலையில் வாகன சோதனையில் போக்குவரத்து  உதவி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிறப்பு  உதவி ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் ஆட்டோவை மறித்தனர். அப்போது அரிகிருஷ்  ணன், தனது நண்பரை இறக்கிவிட வந்ததாக  கூறினார். அவரிடம் லைசன்ஸ், இ-பாஸ் இல்லாத தால் வழக்கு பதிவு செய்து 500 ரூபாய் அபராதம்  விதித்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். அப்போது அரிகிருஷ்ணன், அபராதத்தை செலுத்துவதாகவும், வெகு  தொலைவு செல்ல வேண்டி இருப்பதால் ஆட்டோவை விடுவிக்க வேண்டும்  என்று கெஞ்சியுள்ளார். அதனை ஏற்க காவலர்கள் மறுத்தனர். இதனை யடுத்து ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு அரிகிருஷ்ணன் தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் தீயை அனைத்தனர். தீக்காயம் அடைந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

;