tamilnadu

img

தமிழக சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

சென்னை:
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் செவ்வாயன்று (செப். 1) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.தமிழகத்தில் தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் கட்டுப் பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள் ளன. இதில் 20 இடங்களில் செப்டம் பர் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வதாக அறிவிக்கப் பட்டது.

சேலம் மாவட்டத்தில் ஒமலூர், வீரசோழபுரம், மேட்டுப் பட்டி, நத்தக்கரை, வைகுந்தம் பகுதியிலும், திருச்சி மாவட்டத் தில், சமயபுரம், பொன்னம் பலப்பட்டி, திருப்பராய்த்துறையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.இதை தவிர புதூர் பாண்டியபுரம், எலியார்பதி, கொடைரோடு, வேலஞ்செட்டியூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப் பட்டது.  வாகனங்களின் தரத்திற்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

விக்கிரவாண்டி உயர்வு இல்லை....
திண்டிவனம் முதல் உளுந் தூர்பேட்டை செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூர நான்கு வழிச்சாலையை பராமரித்து வரும் உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம், வாகனங்களுக்கு விக்கிரவாண்டியில் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது.நடப்பாண்டில் கொரோனா பரவல் காரணமாக, கட்டணத்தை உயர்த்தப்போவதில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அறிவுறுத்தலின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

;