tamilnadu

img

அரக்கோணம்,திருவண்ணாமலை,அரக்கோணம் மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தார்

அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு போட்டியிடும் மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் பிரச்சாரம் மேற்கொண்டார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, காட்பாடி தாலுகா செயலாளர் கே .ஜெ. சீனிவாசன், காட்பாடி பகுதி திமுக செயலாளர் வன்னிய ராஜா, மதிமுக நகரச் செயலாளர் கே.ஜி. சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.


திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியினர் வேங்கிக்கால் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.



அரக்கோணம் தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனை ஆதரித்து, சிபிஎம் சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் சீனிவாசன், என்.காசிநாதன் தலைமையில் அரக்கோணம் நகராட்சி பழனிப்பேட்டை, ஏபிஎம் சர்ச் பகுதிகளில் வீடு வீடாகச்சென்று வாக்குகள் கோரினர்.



மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட 86ஆவது வட்டம் ஐசிஎப் காலனி பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் சு.லெனின்சுந்தர், எ.ராயப்பன், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;