tamilnadu

img

மக்கள் விரோத ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து மறியல்!

தமிழ்நாடு அரசு கோரிய நிதியை வழங்காத ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் மத்திய சென்னை மாவட்ட, சாஸ்திரி பவன் முன்பு நடைபெற்ற மறியலில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  வடசென்னை மாவட்டம் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராசன், எம்எ.ஸ்.மூர்த்தி (சிபிஐ), திருநாவுக்கரசு (சிபிஐ எம்எல்) லிபரேசன் உள்ளிட்ட பலர். திருவள்ளூரில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், சிபிஐ (எம்.எல்) மாவட்ட செயலாளர் எம்.அன்பு ஆகியோர் தலைமையிலும் மறியல் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  செங்கல்பட்டில் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், சிபிஐ மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், சிபிஐஎம்எல் லிபரேசன் மாவட்ட செயலாளர் இரணியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் மாநிலக்குழு உறுப்பினர் சுதீர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஐ மாவட்டச் செயலாளர் டி. இராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். வேலூரில்  சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ராஜசேகரன், மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஜி.லதா சிபிஐ எம்எல் மாவட்டச் செயலாளர் எம்.சரோஜா ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில்  சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், சிபிஐ மாவட்ட செயற்குழு இரா.கஜேந்திரன், சிபிஐ எம்எல் ஒன்றிய செயலாளர் கே.ஜான் பாஷா ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது. விழுப்புரத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினர் கே.திருச்செல்வம்  சிபிஐ மாவட்டச் செயலாளர் ஆ.சௌரிராஜன் ஆகியோர் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் இரா. தங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். ராணிப்பேட்டையில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஆர். பத்ரி தலைமையிலும்  கடலூரில்  சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் வி. குளோப், சிபிஎம்எல் மாவட்ட குழு உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் தலைமையிலும் மறியல் நடைபெற்றது.  புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், விசிக முதன்மை செயலாளர் தேவப்பொழிலன், சிபிஐ எம்எல் நிர்வாகி புருஷோத்தமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.