tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா தொற்று...

சென்னை 
கடந்த 5 மாத காலமாக தமிழகத்தை இடைவெளி இல்லாமல் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது. 50-கும் மேற்பட்டோரை காவு வாங்கி வரும் கொரோனா வைரஸ் மக்கள் நெருக்கம் உள்ள  நகரம், மக்கள் நெருக்கம் இல்லாத கிராமம் என் இரண்டிலும் பாரபட்சமின்றி தாறுமாறான வேகத்தில் பரவி வருகிறது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரதத்தில் புதிதாக 5,516 பேர் கொரோனா நோயாளிகளாக மருத்துவமனைக்கு அடியெடுத்து வைத்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 5,14.993 ஆக உயர்ந்துள்ளது.  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 60 பேர் இன்று  உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,811 ஆக அதிகரித்துள்ளது. 5,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 4,86,479 பேர் கொரோனாவை  வென்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இன்னும் 46,703 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னை மண்டலம்... 

இன்றைய பாதிப்பு - 996 

மொத்த பாதிப்பு   - 1,55,639 

இன்றைய பலி  - 12 

மொத்த உயிரிழப்பு  - 3,058   

;