tamilnadu

img

‘பெபி’ தலைவர் ராவ் நினைவு அறக்கட்டளை புகழஞ்சலிக் கூட்டத்தில் அறிவிப்பு

சென்னை, ஜன. 12 - இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெஃபி) முன்னாள் மாநிலத் தலைவர் எம்.எஸ்.என்.ராவ் புகழஞ்சலிக் கூட்டம் ஞாயிறன்று (டிச.12) சென்னையில் நடைபெற்றது. 1976 ஆம் ஆண்டு சிண்டிகேட் வங்கி பணியாளர் சங்கத்தை உருவாக்கி, 41 ஆண்டுகள் அதன் பொதுச் செயலாளராக எம்.சத்ய நாராயண ராவ் பணியாற்றினார். எம்.எஸ்.என். ராவ் என்ற ழைக்கப்படக்கூடிய அவர், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட தலை வர்களோடு நெருக்கம் கொண்டி ருந்தார். 1984 ஆம் ஆண்டு பணி யாளர் சங்கத்தை பெஃபி அமைப்போடு இணைத்தார். பெஃபி-யின் மாநிலத் தலைவாக 11 ஆண்டுகளும், அகில இந்திய உதவித் தலைவ ராக 16 ஆண்டுகளும் பணியாற் றிய எம்.எஸ்.என்.ராவ், கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி இயற்கை எய்திய அவருக்கு வயது 80.
அநீதிக்கு எதிராக...
பெஃபி, பணியாளர் சங்கமும் இணைந்து நடத்திய இரங்கல் கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசுகையில், “வங்கி ஊழியர் அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒற்றுமைப் படுத்தி, பெஃபி-யில் இணைத்த தில் பெரும்பங்கு வகித்தவர் எம்.எஸ்.என். ராவ். அநீதிக்கு எதிராக தொடர்ந்து போர்க்குரல் எழுப்பினார். பணி நீக்கம் செய்யப்பட்டாலும், அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்ற உந்துதலை ஊழியர்களிடத்தில் உருவாக்கியவர் அவர்.” என்று புகழ்ந்துரைத்தார். “1976 ஆம் ஆண்டு சிண்டி கேட் வங்கி பணியாளர் சங்கத்தை உருவாக்கிய காலகட்டத்தை விட தற்போது கடுமையான நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளோம். சங்கம் சேரும் உரிமைக்கே ஆபத்து வந்துள்ளது. பொதுத் துறைகளை பாதுகாப்பது நாட்டின் எதிர்காலத்தோடு இணைந்தது என்பதை உணர்ந்து எம்.எஸ்.என்.ராவ் வழியில் போராடுவோம்” என்றும் அவர் கூறினார்.
நூல் வெளியீடு...
சிண்டிகேட் வங்கி பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என். சுப்பிரமணியன் குறிப்பிடுகையில், “ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையிலும், பணி ஓய்வு பெற்று நலிந்தநிலையில் உள்ள ஊழியர்களுக்கு உதவிட, தோழர் எம்.எஸ்.என்.ராவ் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கப்படும். அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்படும்” என்றார். பெஃபி தலைவர் தி.தமிழரசு தலைமையில் நடைபெற்ற இந்த புகழஞ்சலிக் கூட்டத்தில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார், பெஃபி அகில இந்திய துணைத் தலை வர்கள் பிரதீப் பிஸ்வாஸ், சி.பி. கிருஷ்ணன், செயலாளர் கே. கிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் என். ராஜகோபால், கனரா வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜி.எம்.வி. நாயக், சிண்டிகேட் வங்கி பணியாளர் சங்கத் தலைவர் சீனிவாசபாபு,முன்னாள் செய லாளர் கங்காதரன், எழுத்தாளர் எஸ்.வி. வேணுகோபாலன், கவிஞர் பிரேமலதா உள்ளிட் டோர் பேசினர்.

;