tamilnadu

img

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் 50% உயர்வு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில், இளநிலை பொறியியல் படிப்புகளில் ரூ.150 ஆக இருந்த தேர்வுக் கட்டணம், ரூ.225 ஆகவும், ரூ.300 ஆக இருந்த செய்முறை சமர்ப்பிப்புக்கான கட்டணம் ரூ.450 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம், ரூ.650-ஆகவும், இதுபோன்று முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரை (ஒரு தாளுக்கு) சமர்ப்பிப்புக்கு ரூ.600-ஆக இருந்த கட்டணம் ரூ.900-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை,  முதுநிலை பொறியியல் படிப்புக்கான டிகிரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 லிருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த 50% தேர்வுக் கட்டணம் உயர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து, கட்டண உயர்வை திரும்பப்பெற மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.