tamilnadu

img

வக்பு வாரியத்தை முடக்கும் சட்ட திருத்தத்தை நிதிஷ், சந்திரபாபு எதிர்க்க வேண்டும்!

சென்னை, ஆக. 6 - வக்பு வாரிய சொத்துக்களை தன்வயப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மோடி அரசின்  தீய நோக்கம்!

முஸ்லிம் தனவந்தர்கள் சமூக நலனுக்காக அர்ப்பணித்துள்ள சொத்துக்களே வக்பு சொத்துகள் என அழைக்கப்படுகின்றன. வக்பு சொத்துகளைக் கண்காணித்து மேலாண்மை செய்வதற்காக மத்திய வக்பு வாரியமும் மாநில வக்பு வாரியங்களும் உருவாக்கப்பட்டன.

தற்போது வக்பு வாரியச் சட்டத்தில் 40 வகையான திருத் தங்களை மோடி அரசு மேற்கொ ள்ளவிருப்பதாகச் செய்திகள் இப் போது ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளன. வக்பு வாரி யங்களின் செயல்பாடுகளை முடக்கி வக்பு சொத்துகளைத் தன் வயப்படுத்தும் தீய நோக்கத்து டன் இச்சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

மாநில அரசு தான் நிர்வகிக்கிறது

வக்பு வாரியம் எந்த ஒரு சொத்தையும் தனது சொத்து என்று அறிவிக்கலாம் என்று தவறான கருத்து பரப்பப்படு கிறது. ஒரு மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துகளை நில ஆய்வு  செய்து அடையாளம் காணும் பொறுப்பு மாநில அரசின் வரு வாய்த் துறைக்கே இருக்கின்றது. வக்பு வாரியத்தின் தலைமை செயல் அலுவலராக செயல்படு பவர் மாநில அரசால் நியமிக்கப் படும் அரசு அலுவலர் தான். வக்பு வாரியத்தில் பெண்கள் உறுப்பின ர்களாகவும் வாரியத்தின் தலை வர்களாகவும் செயல்பட்டு வரு கின்றனர்.

மோடி அரசு ஏற்கனவே மிகவும் சிறுபான்மையினரான ஆங்கிலோ இந்தியர்களுக்கு இருந்த உரிமைகளைப் பறித்தது. தற்போது ரயில்வே ராணுவத்திற்கு அடுத்த அதிக மாக நிலப்பரப்புள்ள சொத்து களைப் பறிக்கும் நோக்கத்தில் இந்தத் திருத்தங்களைக் கொண்டு வர முயல்கின்றது. 

அறிமுக நிலையிலேயே எதிர்க்க வேண்டும்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்திருத்தங் களை முன்மொழியும் மசோதா தாக்கல் செய்யப்படும் போது இந்தியா கூட்டணிக் கட்சிகள் அறி முக நிலையிலேயே எதிர்த்து இத்திருத்தங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின்  சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமாரும் இந்தத் திருத்தங்களை எதிர்க்க வேண்டும். இவ்வாறு எம்.எச். ஜவாஹிருல்லா தெரி வித்துள்ளார்.