tamilnadu

img

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகசம்

சென்னை,செப்.9- இந்திய விமானப்படை யின் 92-வது நிறுவன தினத்தை ஒட்டி சென்னை யில் அக்.8-ல் விமானப்படை  சாகச நிகழ்ச்சி நடைபெறு கிறது. இந்திய விமானப்படை யின் அணிவகுப்பு சென்னை யில் காலை 7.45 மணிக்கு  தொடங்கும் என அறிவித் துள்ளனர். அணிவகுப்பை தொடர்ந்து மெரினா கடற் கரையில் பிரமாண்டமான விமான கண்காட்சி நடை பெற உள்ளது. இந்திய விமானப்படை யின் நிறுவன தினம் சென்னை யில் கொண்டாடப்பட வுள்ளது. 1932 ஆம் ஆண்டு  அக்டோபர் 8 ஆம் தேதி  விமானப்படை நிறுவப் பட்டதை நினைவுகூரும் வகையில் விமானப்படை யின் நிறுவன தினம் கொண் டாடப்படுகிறது. இதற்கு முந்தைய கொண்டாட்டங் கள் சண்டிகர் மற்றும் பிர யாக்ராஜில் நடைபெற்றது.