tamilnadu

40 /40

சென்னை, ஜூன் 4- 18வது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் 40 தொகுதி களையும் கைப்பற்றி, திமுக தலைமை யிலான ‘இந்தியா’ கூட்டணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

திமுக (22), காங்கிரஸ் (10), மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (2), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), மதிமுக (1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) ஆகிய கட்சிகள் போட்டி யிட்ட அனைத்து இடங்களிலும் வென்றுள்ளன. 40 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திரு விழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 அன்று துவங்கி ஜூன் 1  வரை ஏழு கட்டங்களாக நடந்துமுடிந்தது. 

பாஜக தலைவர் அண்ணாமலை கோவையிலும், ஒன்றிய அமைச்சர் எல்.  முருகன் நீலகிரியிலும், டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தென்சென்னை தொகுதி யிலும், நயினார் நாகேந்திரன் திரு நெல்வேலியிலும், பொன். ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரியிலும் தோல்வி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்ட ஐஜேகே கட்சித் தலைவர் பச்சைமுத்து (எ) பாரிவேந்தர் 4 லட்சம் வாக்குகள் வித்தி யாசத்தில் தோற்று, டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளார். அதேபோல நாமக்கல் பாஜக வேட்பாளர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோரும் டெபாசிட்டை இழந்தனர். 

பாஜக கூட்டணியில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி, இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக  தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்டோ ருக்கும் தோல்வியையே மக்கள் பரி சளித்தனர்.

தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி யான அதிமுக, பல தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2019  தேர்தலில் ஒரு இடத்தைப் பெற்றிருந்த அதிமுக, இந்த முறை அந்த ஒரு இடத்தை யும் கூட பெற முடியாமல் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி யில் உள்ள 40 மக்களவைத் தொகுதி களில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளில் ஜூன் 4 அன்று  காலை 8 மணிக்குத் துவங்கி எண்ணப் பட்டன. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக தலைமை யிலான ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் களே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது. இதில், தொடக்கச் சுற்று முதல் ‘இந்தியா’ கூட்டணி  வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தருமபுரி, விருதுநகர் ஆகிய இரண்டு தொகுதிகளை தவிர 38 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களே கடைசி சுற்று வரைக்கும் முன்னிலையை  தக்க வைத்தனர். முடிவில் லட்சக்கணக் கான வாக்குகள் வித்தியாசத்தில் ‘இந்  தியா’ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி யைத் தங்கள் வசமாக்கினர்.

புதுச்சேரியிலும் ‘இந்தியா’ கூட்டணி யின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கம் தொடக்கம் முதல் முன்னிலை வகித்தார். அவர் தன்னை எதிர்த்து போட்டி யிட்ட மாநில அமைச்சரும் பாஜக வேட்பா ளருமான நமச்சிவாயத்தை தோற்க டித்தார்.

‘தென் மாநிலங்களில் புதிய வீச்சை  ஏற்படுத்துவோம்’ என்று பாஜக சூளு ரைத்த நிலையில், அக்கட்சியை தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மக்கள்  படுதோல்வி அடையச் செய்துள்ளனர்.

தோல்வியைத் தழுவிய பிரபலங்கள்!

இந்த மக்களவைத் தேர்தலில், தங்க ளுக்கு சாதகமான மீடியாக்கள் மூலமாக  விளம்பர வெளிச்சம் பெற்றிருந்த வேட்பா ளர்களான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை (கோவை), தமிழிசை சவுந்தரராஜன் (தென் சென்னை), முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் (கன்னியாகுமரி), ஒன்றிய  அமைச்சர் எல். முருகன் (நீலகிரி), முன்  னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (இராமநாதபுரம்), பாஜக சட்டமன்ற தலை வர் நயினார் நாகேந்திரன் (நெல்லை), முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மனைவி  சவுமியா அன்புமணி (தருமபுரி), திரைப்பட  இயக்குநர் தங்கர் பச்சான் (கடலூர்), ராதிகா சரத்குமார், விஜயபிரபாகரன் (விருதுநகர்), அமமுக தலைவர் டி.டி.வி.  தினகரன் (தேனி), ஏ.சி. சண்முகம் (வேலூர்), ஐஜேகே தலைவர் பாரி வேந்தர் (பெரம்பலூர்), புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் (தென்காசி) வீரப்பனின் மகள் வித்யா ராணி (கிருஷ்ணகிரி) உள்ளிட்ட பலரும் இந்த தேர்தலில் படு தோல்வியை தழுவி னர்.

விளவங்கோடு இடைத்தேர்தலிலும் அதிமுக - பாஜக தோல்வி

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பர்ட் நிறுத்தப் பட்டார். அதிமுக சார்பில் ராணி களம்  கண்டார். வி.எஸ். நந்தினியை பாஜக  நிறுத்தியது. இந்நிலையில், செவ்வா யன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பெர்ட் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக, அதிமுக வேட்பாளர்களை சுமார் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் மீண்டும்  விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

திமுக - 22 (வெற்றி - 7, முன்னிலை -15)
காங்கிரஸ் - 9 (வெற்றி - 3, முன்னிலை -6)
சிபிஎம் - 2 (வெற்றி -2)
சிபிஐ - 2 (வெற்றி -2)
விசிக - 2 (வெற்றி - 1, முன்னிலை -1)
மதிமுக - 1 (வெற்றி)
ஐயுஎம்எல் - 1 (வெற்றி) 
(இரவு 9.30 நிலவரப்படி)