எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு உதவும் ஏ.ஐ கருவி!
எழுத, படிக்கத் தெரியாதவர் ்களுக்கு உதவிய ‘லிட்ரெசி பென்’ (Literacy Pen) என்ற ஏ.ஐ கருவியை வேர்ல்ட் லிட்டரசி பவுண் டேஷன் (World Literacy Founda tion) அறிமுகம் செய்துள்ளது.
அடுத்த 16 ஆண்டுகளில் உல கெங்கிலும் உள்ள கல்வியறி வின்மையை ஒழிக்கும் நோக்கில் மீடியா மாங்க்ஸ் (Media Monks) என்ற நிறுவனத்துடன் இணைந்து வேர்ல்ட் லிட்டரசி பவுண்டேஷன் இந்த கருவியை உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் திரைகொண்ட இந்த Literacy Pen என்ற கருவியில் பேனா அல்லது பென்சிலை பொருத்த வேண்டும். பின்னர், நாம் சொல்லும் வார்த்தையை மைக்ரோபோன் மூலம் உள்வாங்கி அந்த வார்த்தையை டிஜிட்டல் திரை யில் காட்டுகிறது. எழுத படிக்கத் தெரியாதவர்கள் அதனைப் பார்த்து அப்படியே எழுத முடியும். இந்த 2025-இல் விற்பனைக்கு தயாராக இருக்கும் என்று வேர்ல்ட் லிட்டரசி பவுண்டேஷன் வெளியிட்டுள்ள டெ மோ வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாக்கின் நிறத்தை வைத்து நோய்களை கண்டறியும் ஏ.ஐ!
நாக்கின் நிறத்தை வைத்து நோய் களை 98% துல்லியமாகக் கண்டறியும் ஏ.ஐ அல்காரிதத்தை இராக் மற்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச் சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மிடில் டெக்னிக்கல் பல்கலைக் கழகம் (Middle Technical Univer sity) மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக (University of South Australia) ஆராய்ச்சியாளர்கள் 5,260 படங்களைப் பயன்படுத்தி நாக்கு நிறத்தைக் கண்டறியும் முறையை ஏ.ஐ இயந்திரத்திற்கு வெற்றிகரமாகப் பயிற்றுவித்துள்ளனர். 60 நோயா ளிகளிடம் இருந்து பெறப்பட்ட அவர்க ளின் நாக்கின் படங்களை யும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வில், நோ யாளிகளிடமிருந்து 20 சென்டிமீட்டர் தொலைவில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் நாக்கை படம் பிடித்து, அந்த புகைப் படத்தை ஏ.ஐ பகுப்பாய்வு செய்து நோய்களை கண்டறிகிறது.
இதன் மூலம், நீரிழிவு, ஆஸ்துமா, பக்கவாதம், ரத்த சோகை உள்ளிட்ட நோய்களை 98% துல்லிய மாக ஏ.ஐ மாதிரி கண்டறிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள னர்.
2000 ஆண்டுகள் பழமையான சீனா வின் பாரம்பரிய மருத்துவம் தான் நாக்கின் படங்கள் மூலம் நோயைக் கண்டறிய தனக்கு ஊக்கமளித்ததாக மிடில் டெக்னிக்கல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அலி அல்-நஜி தெரி வித்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் புதிய பிரைவசி அம்சம் அறிமுகம்!
வாட்ஸ்அப்பில் போன் எண்ணுக்கு (Phone Num ber) பதிலாக யூசர்நேமை (User name) காண்பிக்கும் புதிய பிரைவசி அம்சத்தை அந்நிறுவனம் சோதனை செய்து வருகின்றது.
இது குறித்து WABetaInfo வெளி யிட்டுள்ள அறிக்கையின் படி, “User name and PIN” என்ற இந்த அம்சத் தில், பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் கணக்கில் “Username”, “Phone number” மற்றும் “Username with PIN” ஆகிய 3 செட்டிங்குகள் வழங்கப் படுகிறது. இந்த “Username” செட்டிங்கை தேர்வு செய்தால், பய னர்கள் தங்களின் போன் எண்ணுக்கு பதிலாக யூசர்நேமை மட்டும் மற்ற வர்களுக்கு காண்பிக்கும் வகையில் மாற்றிக் கொள்ளலாம். அதேபோல் “Username with PIN” செட்டிங்க்ஸை தேர்வு செய்தால், பய னர்கள் தங்கள் PIN எண்ணை பகிர்ந்து கொண்டவர்கள் மட்டுமே அவர்களு டன் மெசேஜ் அனுப்ப முடியும். இதன் மூலம் தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த அம்சம் அறிமுக மாக வாய்ப்புள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது.