வாட்ஸ்அப்பில் ஏ.ஐ புகைப்படங்கள்- விரைவில் அறிமுகம்!
வாட்ஸ்அப் சாட்டில் ஏ.ஐ புகைப்படங்கள் உருவாக்கும் அம்சம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக WABetaInfo அறிக்கை வெளியிட்டுள்ளது.
WABetaInfo அறிக்கையின் படி, மெட்டா ஏ.ஐ மூலமாக வாட்ஸ்அப் சாட்டில் ஏ.ஐ புகைப்படங்கள் உருவாக்கும் அம்சத்தின் ஷார்ட்கட் (shortcut) ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.24.12.4 இல் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சாட்டில் Attachment ஐகானை கிளிக் செய்தால் “Imagine” என்ற பெயரில் Meta AI ரிங் லோகோவுடன் ஐகான் ஒன்று காணப்படும். அதனை கிளிக் செய்தால் ஏ.ஐ புகைப்படங்கள் உருவாக்கும் ஆப்ஷன்களை காண்பிக்கும்.
இந்த அம்சம் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது சோதனை நிலையில் உள்ளது; விரைவில் இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வடிவில் ஜிமெயில்!
ஆண்ட்ராய்ட் போன்களுக்கான ஜிமெயில் செயலியில், விரைவாகப் பதிலளிக்கும் (Quick Reply) அம்சம் புதிய வடிவில் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ஜிமெயில் செயலியில் இ-மெயில்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றால், கீழே உள்ள Reply என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Compose Box-ஐ திறந்து மெசேஜ்களை டைப் செய்ய வேண்டும். ஆனால், இப்போது Reply ஆப்ஷனுடன் கீழே டெக்ஸ்ட் பாக்ஸ் (Text Box) ஒன்று காண்பிக்கப்படும். அதில் ‘Reply’, ‘Reply all’ மற்றும் ‘Forward’ ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த டெக்ஸ்ட் பாக்ஸ்-இல் இடதுபக்கத்தில் ‘Attach a file’, dropdown menu ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அதனுடன், இமோஜி ஐகான்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த Text Box-ஐ, Compose Box ஆகவும் விரிவுபடுத்த முடியும். இந்த அப்டேட் ஆண்ட்ராய்டுக்கான ஜிமெயில் 2024.05.05.x இல் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பல டிவைஸ்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது எப்படி?
ஒரே நேரத்தில் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டை பல டிவைஸ்களில் பயன்படுத்துவது மல்டி டிவைஸ் சப்போர்ட் (Multi Device Support) என்று அழைக்கப்படுகிறது. இதனை companion mode என்ற அம்சம் மூலம் செயல்படுத்த முடியும். இதற்கு உங்கள் பிரைமரி டிவைஸ் மூலம் மற்ற டிவைஸ்களை இணைக்க வேண்டும்.
உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டை ஒரே நேரத்தில் 4 வெவ்வேறு மொபைல் களிலோ அல்லது மொபைல், வெப் ப்ரவுசர் (Web browser), டெஸ்க்டாப் (Desktop) மற்றும் லேப்டாப் (Laptop) ஆகியவற்றிலோ பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப் வெப் மூலமாக உங்களு டைய லேப்டாப் உடன் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டை, பிரைமரி போனில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பயன்படுத்தலாம். ஆனால் பல்வேறு போன்களில் பயன் படுத்த, பிரைமரி டிவைஸ் அல்லாத போன்களில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்து போன் நம்பரை டைப் செய்தால் கம்பேனியன் (companion) சாதனமாக இணைப்பதற்கான ஆப்ஷனை பெறு வீர்கள். அதனை தேர்வு செய்த பிறகு QR கோடை ஸ்கேன் செய்து பயன்படு த்த முடியும். இந்த companion mode-ஐ செயல்படுத்த பிரைமரி போனில் உள்ள வாட்ஸ்அப் அக்கவுண்ட் 14 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் login செய்ய வேண்டும். login செய்யாவிட்டால் மற்ற டிவைஸ்கள் தானாக logout ஆகி விடும். மேலும், companion mode-இல் லைவ் லொகேஷன் (Live Location) மற்றும் ஸ்டேட்டஸ் போன்ற அம்சங்கள் பயன்படுத்த முடியாது.