tamilnadu

img

ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேளாண் அலுவலர் வேலை

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம், வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமன செய்வதற்கான தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும்.

அதன் விவரம்;

பணி: வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்)

காலியிடங்கள்: 33+4

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

பணி: வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்)

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

பணி: தோட்டக்கலை அலுவலர்

காலியிடங்கள்: 41 + 7

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

தகுதி: வேளாண் பாடத்தில் இளங்கலை, முதுகலை பட்டம், தோட்டக்கலைப் பாடப்பிரிவில் பட்டம், முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழில் போதிய மொழிறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்வில் பெற்ற மொத்த  மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு அடிப்படை.யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.2.2023

மேலும் விரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/01_2023_Agri%20and%20Horti_Tamil.pdf