சென்னை, நவ.26- மானுட சமூகத்தின் ஒரு மகத்தான கனவு சோவியத் ரஷ்யா. முதலாளிகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க நினைத்த லெனினின் மகத்தான முயற்சி. முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப்போர் என்ற முதலாளித்துவ சண்டைகளின் நடுவே உருவான சோவியத் ஒன்றியத்தில் உழைக்கும் மக்கள் ஒருபுறமும் முதலா ளித்துவ சக்திகள் மறுபுறமும் நின்று நடத்திய யுத்தத்தின் சாட்சியாக இருக்கிறது அக்னி பரீட்சை. இந்த காவியத்தின் மூலம் சோவியத் ரஷ்யா எப்படி உருவானது என்பதை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் அலெக்சேய் டால்ஸ்டாய். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான முயற்சியின் விளைவாக மீண்டும் தமிழில் வெளி வருகிறது 2,400 பக்கங்கள் கொண்ட அக்னி பரிட்சை நூல். மூன்று பகுதிகளாக வெளிவரும் இதன் விலை ரூ.3 ஆயிரம். முன் வெளியீட்டு திட்டத்தின் படி நவம்பர் 30ஆம் தேதிக்குள் பணம் அனுப்புபவர்களுக்கு ரூ.2,000 ரூபாய்க்கு கிடைக்கும். மின்னங்காடி வெளியீடாக இந்த நூல் வரும் ஜனவரி 1 முதல் கிடைக்கும். முகவரி மற்றும் பணம் அனுப்ப வேண்டிய whatsapp மற்றும் ஜிபே எண்.72992 41264.