tamilnadu

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

சென்னை, ஏப். 26- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை வரும் மே மாதம் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனை புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவு ஆகியவற்றுடன் விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி, ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வோண்டோ, கையுந்துப்பந்து, பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், வில்வித்தை ஆகியவை மாணவர்களுக்கான விளையாட்டுகள். தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வோண்டோ, கையுந்துப்பந்து, பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ் ஆகியவை மாணவிகளுக்கான விளையாட்டுகள்.மேற்கண்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் மே மாதம் 5ஆம் தேதி முதல்10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவிகள் அதற்கான உரிய படிவங்களை ஏப்ரல் 26ஆம் தேதி முதல் றறற.ளனயவ.வn.படிஎ.in என்ற இணைய தள முகவரியில் பூர்த்தி செய்து மே மாதம் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;